1974 ஆம் ஆண்டு, கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார் இந்திரா..
அதுதான் பெரிய பிரச்சினை என
50 ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.
ஆனால் உண்மை நிலை என்ன?
வெறும் 1.75 சதுரகிலோமீட்டர் பரப்பு கொண்ட கச்சத்தீவைக்கொடுத்து,
இந்தியக் கடல்எல்லையை 4000 சகிமீட்டருக்கு விரிவுபடுத்தினார் இந்திரா.
அதனால் தமிழக மீனவர்கள் பெரிய கடல் பரப்பில் மீன்பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டது என
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்து இருக்கின்றார் .
என் கருத்தும் அதுதான்.
ஆனால், தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல்,
தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல்
தான்தோன்றித்தனமாக அந்தத் தீவை இந்திரா கொடுத்ததுதான் பிரச்சினை.
அது தொடர்பான அரசு அமைப்புச் சட்ட ஆய்வுப் பிரச்சினை குறித்த வழக்கு,
உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. .
அது வேறு கதை
ஆனால்,
40 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் பல நூறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும்,
தமிழ்நாட்டு மீனவர்கள் அதை உணரவில்லை..
வேறு பக்கம் போவதும் இல்லை.
மீண்டும் மீண்டும் அங்கேயேதான் போகின்றார்கள்.
அவர்கள்தான் பிரச்சினையை ஏற்படுத்துகின்றார்கள்.
அதை அவர்களேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆழ்கடலில் மீன்பிடிக்க எந்தத் தடையும் இல்லையே?
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது?
1. மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என ஒரு வாரத்திற்கு முன்பே தொடர்ந்து எச்சரித்து அதன் பிறகே நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர்.
2. அங்கே இவர்கள் பொட்டலமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபியும் எடுத்துள்ளனர்.அதன்பிறகு மலத்தை தொட்டிக்குள் கலந்துள்ளனர்.
3. அதன் பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் ஆனதும் வீடியோவை டெலீட் செய்து விட்டனர்.
4. முதலில் மாற்று சமூகத்தினர் தான் இந்த செயலை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது, ஆனால் மாற்று சமூகத்தினர் இந்த பகுதிக்குள் யாரும் வந்ததில்லை, வந்து போனதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
5. காவல்துறைக்கு சவால் நிறைந்ததாக மாறி போனது வேங்கை வயல் பிரச்சினை. அதன்பிறகு நீர் தொட்டி இருக்கும் பகுதி மக்களிடம் விசாரணை தொடங்கியது. அப்போதுதான் ஒரு சிறிய clue கிடைத்தது.
6. மலம் கலக்குவதர்க்கு முன்பே, மலம் கலந்ததாக சொல்லப்பட்ட செய்தி எவ்வாறு மக்களிடம் சென்றது என்று ஆராய்ந்து. அந்த விஷயத்தை சொன்னவர்கள் மேல் விசாரணை வளையம் தொடங்கியது. அந்த நபர்கள் தான் முதலில் நீர் தொட்டியில் ஏறி உள்ளனர் என்பதை உறுதி செய்த காவல் துறை, அவர்களின் கைபேசியை ஆராய தொடங்கினர்.
7. அதன்பிறகு அந்த கைபேசியில் backup செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இந்த விசாரணை நேரத்தில் இவர்களை சுதந்திரமாக செல்லவும் அனுமதித்துள்ளனர் காவல்துறை. இவர்களை தனிப்படை மூலமும், கைபேசி call recording மூலமும் நோட்ட மிட்டு இருந்தனர்.
8. அப்போதுதான் அந்த cellphone உரையாடல் நிகழ்ந்தது. அதன்பிறகும் காவல்துறை இவர்களை கிடுக்கிப்பிடி செய்யவில்லை. விடியோ ஆதாரம் கிடைத்ததும் தான், நடந்த குற்றத்தை முழுமையாக உறுதி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
9. குற்றதுக்கான பின்னணி என்னவென்றால், மாற்று சமூக பஞ்சாயத்து தலைவரை பழி வாங்க திட்டமிட்டு குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது.
அதனால் இவர்களுக்காக நியாயம் கேட்கிறோம் என்று உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக பல்ப் வாங்கப்போவது உறுதி. சுய ஜாதி பாசத்தால் குற்றவாளிகளுக்கு துணை போகாதீர்கள். இது உங்களுக்கு backfire ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை
இந்த விசயத்தில் காவல்துறையின் விசாரணை முறை அதை உறுதி செய்த விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை. 👌🤝🙏
சுயசாதி உணர்வில், குடிநீரில் மலம் கலந்த சைக்கோ கிரிமினல்களுக்கு ஆதரவாக பேசுவது அன்று மிதந்த மலத்தை விட அருவருப்பானது. கிராமத்தான்கள் எளிய விளிம்பு நிலை மனிதர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற பொதுப்புத்தி மிகத்தவறானது. கிராமத்து எளிய மனிதர்கள்தான் அதீத வன்மம் நிரம்பிய கொடூரகுற்றத்தை குற்ற உணர்வே இல்லாமல் செய்கிறார்கள். 😡😡😡😡
நீங்கள் அரசியல் செய்ய, போராட்டம் நடத்த ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. எங்கடா மலம் மிதக்கும் என்று மட்டும் தயவுசெய்து #அலையாதீர்
Comments
Post a Comment