ரயில் வழிதடங்கள்

தென் மாவட்டத்தில் உள்ள ரயில் வழிதடங்கள் அனைத்தையும் கேரளாவின் கட்டுபாட்டுக்குள் கொண்டு செல்ல மறைமுக சதி:

தெற்கு ரயில்வே எப்ரல் 14 1951-ம் ஆண்டு மூன்று மாநிலரயில்வேகளை இணைத்து இந்தியாவிலேயே முதல் மண்டலமாக  உருவாக்கபட்டது. தற்போது தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகியன ஆகும். தெற்குரயில்வேக்கு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா,கர்நாடகா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ரயில்வழி தடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 3885கி.மீ தூரமும் கேரளாவில் 1050கி.மீ தூரமும், ஆந்திராவில் 121 கி.மீ தூரமும், கர்நாடகாவில் 37கி.மீ தூரமும் புதுச்சேரியில் 11கி.மீ தூரம் என தற்போது 5104 கி;.மீ ரயில் வழி தடங்கள் உள்ளது.

          சென்னை கோட்டத்தில் 830கி.மீ, சேலம் கோட்டத்தில் 780கி.மீ, பாலக்காடு கோட்டத்தில் 575கிமீ, திருவனந்தபுரம் கோட்டத்தில்  625கி.மீ, திருச்சி கோட்டத்தில் 993கி.மீ, மதுரை கோட்டத்தில் 1301 கி.மீ தூரம் ரயில் வழி தடம் உள்ளது. தற்போது சேலம் கோட்டத்தை உள்ளடக்கிய கேரளாவுக்கு என தனியாகரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என கேரளாவில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயும் சேர்த்து மொத்தம் 17 மண்டலங்கள் உள்ளன. இதில் சென்னை, மும்பை, செக்கன்டபாத் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்ட மண்டலங்களில் மட்டும் அதிகபட்சமாக ஆறு கோட்டங்கள் உள்ளன். மற்ற மண்டலங்களில் ஐந்து, நான்கு, மூன்று கோட்டங்கள் என உள்ளன.  நெல்லை 
மற்றும் குமரி மாவட்ட ரயில் வழி தடங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள போதே தொடர்ந்து வேண்டும் என்றே கோட்ட அதிகாரிகள் புறக்கணிக்கபட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள் இயக்குவது இல்லை. இந்த பகுதிரயில்வே வளர்ச்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கபட்டே வருகிறது. தெற்கு ரயில்வே தலைமையகம் குமரி மற்றும் நெல்லை பகுதிகளுக்கு புதிய திட்டங்கள், புதியரயில்கள், ரயில்நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்தால் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் முடிந்த அளவுக்கு முட்டுகட்டை போடுவார்கள், இல்லையென்றால் திட்ட நிதியை அல்லது திட்டத்தையே கேரளாவுக்கு மாற்றி விடுவார்கள்.

             தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ரயில்வழி தடங்களையும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் உள்ள ரயில் வழி தடங்களையும் கேரளாவின் கீழ் கொண்டு செல்ல மறைமுகமாகசதிவலை பின்னப்பட்டுள்ளது. ஒரு ரயில்வே மண்டலம் வேண்டும் என்றால் மூன்று கோட்டங்கள் தேவை. கேரளாவினர் அவர்கள் மாநிலத்துக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.  கேரளாவில் புதியரயில்வழி தடங்கள் திட்டங்கள் புதிதாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மூன்றாவது கோட்டத்துக்கு சேலம் அல்லது மதுரை கோட்டத்தின் மீது கண் வைத்துள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் என்று நாம் கோரிக்கை வைத்தால் அவர்கள் வெகு சுலபமாக அந்த புதிய கோட்டத்தை உள்ளடக்கி கேரளாவுக்கு சாதகமான மத்திய அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகள் மூலமாகஉள்ளடி வேலைகளில் ரகசியமாக ஈடுபட்டு கேரளாவுக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வாங்கி வெகு சுலபமாக பெற்றுவிடுவார்கள். தெற்கு ரயில்வேயில் புதிதாக எதாவது ஒரு கோட்டம் அமைக்கபடுமானால் கோரளா எல்கையில் அருகில்உள்ள மதுரை அல்லது சேலம் கோட்டத்ததை உள்ளடிக்கி கேரளாவுக்கு என தனி மண்டலம் அமைத்து விடுவர். ஏற்கனவே பாலக்காடு கோட்டத்திலிருந்து 50 வருட போராட்டத்துக்கு பிறகு தனி கோட்டமாக உருவெடுத்த சேலம் கோட்டதை மீண்டும் கேரளா ரயில்வே மண்டலத்துடன் இணைக்கு சாத்திய கூறுகள் குறைவு மற்றும் அந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்த மூடியாத நிலை உள்ளது. அவர்களின் அடுத்த இலக்க மதுரை கோட்டம்தான். இந்த நிலையில் மதுரை கோட்டத்தை இரண்டாக பிரித்தால் நாமே கேரளாவை தலைமையிடமாக கொண்ட ரயில்வே மண்டலம் உருவாக்க வழிவகை செய்வதாக அமைந்துவிடும். இவ்வாறு செய்தால்தென்தமிழக ரயில் வழிதட பகுதிகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட மேற்கு கடற்கரை ரயில்வே மணிடலத்தின் கீழ் வந்து விடும். சென்னையை தலைமையிடமாக தெற்கு ரயில்வே கீழ் உள்ளபோதே தென்தமிழ்நாடு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறது. இந்த நிலையில் கேரளா ரயில்வே மணிடலத்தின் கீழ் போய்விட்டால் இந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகள் புதிய ரயில்கள் இயக்கம் என்பதே இல்லாத நிலை ஏற்படும்.  குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள ரயில் வழி தடங்களை மதுரை கோட்டத்துடன் உடணடியாக இணைக்க வேண்டும். கேரளாவை தலைமையிடமாக தனி மண்டலம் அமைப்பதற்கு ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.


                திருநெல்வேலியில் புதிய கோட்டம் உருவாக்கப்பட்டால் சென்னையை தலைமையிடதாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில்  ஏழு கோட்டங்கள் உருவாகும். இந்தியாவில் இது வரை எந்த மண்டலத்திலும் ஏழு கோட்டங்கள் இல்லை. கேரளாவிலிந்து உடனடியாக தெற்கு ரயில்வே மண்டலத்தை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என தனிமண்டலம் வேண்டும் என கோரிக்கை வலுபெற்று பிரித்து விருவார்கள். தற்போது திருநெல்வேலியை தலைமையிடமாக தனி கோட்டம் வேண்டும் என்று கோரிக்கைக்கு பின்பு கேரளாவை சார்ந்த ரயில்வே அதிகாரிகள் உள்ளனர். இதைபோல் கேரளாவில் உள்ளபத்திரிகைகளிலும் திருநெல்வேலி கோட்டம் என்று செய்திகள் அடிக்கடி வெளியீட்டு வருகின்றனர். இது அவர்களின் தூண்டுதலிலேயே நடைபெறுகிறது. அவர்கள் கேரளாவுக்கு என தனி மண்டலம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி நம்மை தூண்டிவிட்டு அவர்கள் தமிழக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ரயில் வழி தடங்களையும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் உள்ள ரயில் வழி தடங்களையும் கேரளாவின் மழு கட்டுபாட்டில் கொண்டு சென்று விடுவார்கள். தற்பொது திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றம் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வளர்ச்சி மற்றும் புதியரயில்கள் இயக்கத்தை ஒப்பிடும் போது மதுரை கோட்டத்தில்உள்ள திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுகர் மாவட்டங்களில்உள்ள ரயில் வளர்ச்சி, ரயில் நிலையங்கள் மற்றும் புதியரயில்கள் இயக்கம் புறக்கணிப்பு இல்லாமல் நல்ல நிலையில்உள்ளன. கடந்த 2012 ரயில் நிதிநிலை அறிக்கையில் கூட திருநெல்வேலியிருந்து மூன்று புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. திருநெல்வேலி மற்றும் அதைசுற்றிய பகுதிகளிலிருந்து வரும் காலங்களில் அதிகமான புதிய ரயில்கள் இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடதக்கது. தற்போது நெல்லை மாவட்ட ரயில் நிலைய விரிவாக்கத்துக்கோ அல்லது நெல்லையிலிருந்து புதிய ரயில் இயக்க வேண்டி மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் செவிசாய்க்கவில்லையென்றால் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு சென்று தமிழில் பேசி நமது கோரிக்கையின் அவசியத்தை தமிழ்நாட்டை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிடலாம். திருநெல்வேலி கோட்டம் உருவாக்கி கேரளாவுக்கு என தனி மண்டலம் உருவாக்கும் பட்சத்தில் புதிய ரயில்கள் இயக்கவோ அல்லது ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்யவோ திருநெல்வேலி கோட்ட அதிகாரிகள் செவிசாய்க்கவில்லையென்றால் கேரளாவுக்கு சென்று மலையாள அதிகாரிகளிடம் போய் ஆங்கிலத்தில் பேசி முறையிட வேண்டும். அவ்வாறு சென்றாலும் நெல்லை மாவட்டத்தில்தற்போது திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள வள்ளியூர், நான்குநேரி ரயில் உள்ளதை போன்று திருநெல்வேலி கோட்டம் காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  

கேரளா வழியாக சுற்று பாதையில் ரயில்கள் இயக்கம்:

               திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பராமரிக்கும் பிட்லைன்களை கேரள பயணிகளின் வசதிக்கான ரயில்களை நிறுத்தி வைக்கும் இடமாக 
(Rail Parking Stand) ரயில்வேத் துறை மாற்றியுள்ளது. திருநெல்வேலி – பிலாஸ்பூர்  ரயில்நாகர்கோவில், திருவனந்தபுரம, எர்ணாகுளம், பாலக்காடு, ஈரோடு வழியாகச் சுற்றுபாதையில் செல்லுகின்ற வகையில் கேரளா பயணிகளுக்கு வேண்டி இயக்கபடுகிறது. இந்த ரயில்திருநெல்வேலியிருந்து விருதுநகர், மதுரை, திண்டுகல் வழியாக இயக்கியிருந்தால் மிக குறைந்த பயண நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் இந்த ரயிலால் நெல்லை மாவட்ட பயணிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை. இது போன்ற ரயில்களை திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம் வழியாக இயக்கிவிட்டு, வேறு புதிய ரயில்களுக்கு திருநெல்வேலியில் இடமில்லாத படி செய்துவிடுகின்றனர் ரெயில்வே அதிகாரிகள். இதில் தமிழக பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதிகபயணகட்டணம் செலுத்தி கேரளா வழியாக சுற்றி கூடுதலாக பயணம் செய்ய வேண்டும். இதனால் அதிக பயணநேரமும், பணவிரயமும் ஏற்படுகிறது. திருநெல்வேலி ரயில் நிலையம் மதுரை கோட்டத்துடன் இருந்த போதே ரயில்வே வாரியத்தில் பணிபுரியும் கேரளாவை சார்ந்த அதிகாரிகள் இது போன்றரயில்களை இயக்கி வருகின்றனனர். திருநெல்வேலி கோட்டம் உருவாக்கி கேரளாவின் முழு கட்டுபாட்டுக்குள் சென்று விட்டால் திருநெல்வேலியிருந்து இது போன்ற ரயில்களை மட்டுமே இயக்குவார்கள். நமது மாவட்ட பயணிகளுக்கு வேண்டி சென்னைக்கு கூடுதல் ரயில்கள், பெங்களுர், மும்பை போன்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்க மாட்டார்கள்.       

திருநெல்வேலி ரயில்வே டிவிஷன் !! மலையாள பத்திரிகைகள் செய்யும் மற்றொரு விஷ(ம) பிரச்சாரம் !!

          சமீப காலங்களில் மலையாள பத்திரிகைகளில் ரயில்வே திட்டங்களில் வரும் ரயில்வே பட்ஜெட்-ல் தமிழகம் அதிவிரைவாக கைகளை நகர்த்துவதாகவும் கேரளம் பின்தங்கிஉள்ளதாகவும் கூக்குரல் எழுப்பி ஜுர வேகத்தில் பிதற்று கின்றன ! ஒப்பாரி வைக்கின்றன !!அந்த பிதற்றலில் ஒரு நயவஞ்சகமும் உள்ளடங்கி இருக்கிறது!! அது தான் திருநெல்வேலி டிவிஷன் குறித்த கட்டு கதைகள் !! ஏதோ திருநேல்வேலியினை தலைமையாக கொண்டு ஒரு புதிய டிவிஷன் ஏறக்குறைய உருவாக விட்டது போலவும் நாகர்கோவில், குமரி உள்ப்பட பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டம் இல் இருந்து பிரித்து திருநெல்வேலி கோட்டதற்குள் வெகு விரைவில் இணைக்கப்படஉள்ளதாக கட்டு கதை புனைகின்றன !! அதன் பின்னணியில் உள்ளசூட்சுமம் என்ன என்றால், திருநெல்வேலி ரயில்வே கோட்டமானது உருவானால் அது தெற்கு ரயில்வே இனது ஏழாவது கோட்டம் ஆகிவிடும் (சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகியன தற்பொழுது உள்ளகோட்டங்கள்) அதன் மூலம்  அந்த புதிய திருநெல்வேலி ரயில்வே கோட்டம் மற்றும் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே கோட்டங்களை இணைத்து கேரளத்தை தலை மை இடமாககொண்டு புதிய ரயில்வே மண்டலம் ( Zone) உருவாக்கி விடலாம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள் !! அதற்காகவே இப்படி ஒரு துஷ்ப்ரச்ச்சரம் செய்ய படுகிறது!!

நாகர்கோவில் மற்றும் குமரி உள்பட்ட ரயில்வே பகுதிகளை புதிய திருநெல்வேலி கோட்டத்திற்கு  கொடுப்பது போல கொடுத்து பின்புலத்தில் அந்த முழு கொட்டத்தையும் சென்னையில் உள்ளதெற்கு ரயில்வே இலிருந்து பிரித்து எடுத்து தங்கள் கைவசம் எடுத்து கேரளத்தை தலைமையிடமாக கொண்ட மண்டலம் 
( Zone)உருவாக்கிட அவர்கள் புரிகின்ற சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது !! இது வெற்றி பெறாத பட்சத்தில், புதிய மங்களூரு ( தற்சமயம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ளமலையாள அதிகாரிகளின் கையில் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போன்று அவதிப்படும் ஒரு கர்நாடக ரயில் நிலையம்)ரயில்வே கோட்டம் உருவாக்கி இது போல ஒரு புதிய ரயில்வே மண்டலம் ( Zone) உருவாக்கிடவும் திரைமறைவில் நாடகங்கள் உருவாகின்றன !!

இது போன்ற சதி திட்டங்களில் இருந்து திருநெல்வேலி,
நாகர்கோவில், குமரி, மற்றும் மங்களூரு பகுதிகள் கவனமாக இருக்க வேண்டும். திருவனந்தபுரம் கோட்டம் இல் பிரிந்து வந்து திருநெல்வேலி கோட்டத்தில் இணைகின்ற படலத்தில் மீண்டும் கேரளா வை தலைமையிடமாக கொண்ட ரயில்வே மண்டலத்தில் சேர்வது தற்கொலைக்கு ஒப்பான நிகழ்வாகும் !! இதன் மூலம் குமரி மற்றும் நாகர்கோவில் இற்கு அடுத்தபடியாக திருநெல்வேலியும் அவர்களது ரயில்வே ''parking stand ' ஆகி விடும் !!அதே போல் மங்களூருவும் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து பிரிந்தால் அவர்கள் தென் மேற்கு ரயில்வே ( ஹூப்ளி ) உடன் சேர்ந்து விட வேண்டும். திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்கள் இனைந்து ஒரு புதிய மண்டலம் உருவாக முயற்சித்தால், குமரி, நாகர்கோவில், திருநெல்வேலி வரை உள்ள இருப்பு பாதைகளை முதற்க்கண் மதுரை ரயில்வே கோட்டத்துடன் சேர்த்து விட வேண்டும் !! அதே போல் பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள இருப்பு பாதைகளை சேலம் அல்லது மதுரை கோட்டங்களுடன் இணைக்க வேண்டும்.

ரயில்வே துறை உடனடியாக செய்ய வேண்டியது.

1.    திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம்(தவிர) மற்றும் நாகர்கோவில் -  திருநெல்வேலி வழித்தடப் இருப்பு பாதை பகுதிகளை மதுரை கோட்டத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும்.
2.    பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள இருப்பு பாதையை சேலம் கோட்டத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும்.
3.    பாலக்காடு கோட்டத்தில் உள்ள மங்களுர் பகுதிளை உடனடியாக 
ஹூப்ளியை தலைமையிடமாக கொண்ட தென்மேற்கு ரயில்வேயிடம் இணைக்க வேண்டும்.
4.    மதுரை கோட்டத்தில் உள்ள கொல்லம் - புலனூர் - செங்கோட்டை (தவிர) ரயில் தட இருப்பு பாதைகளை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைத்து விட வேண்டும்.
5.    திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் உள்ளரயில பாதைகள் மிக குறைவான இருப்பு பாதைகளாக இருப்பதால் இரண்டு கோட்டத்தையும் இணைத்து ஒரு கோட்டமாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் ரயில்வே துறைக்கு தேவையில்லாமல் ஏற்படும் நிற்வாக செயவு குறையும்.



நன்றி      




Thanks & Regards,

P.Edward Jeni
Secretary 
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,Kanyakumari District
G.S.M : +91 9443002949
Visit our Facebook  : www.facebook.com/Kanniyakumari

http://kkdrua.blogspot.com
 


http://groups.yahoo.com/group/kkdrua/join

Comments

  • TET - TET Passed Candidates Welfare Association K. Shanmuga Priya No.389/2, Rose Valley Opposite to Bismillah Nagar Hosur - 635 109
  • Election 2024 - [image: ELECTION DATES] [image: SUN TV]
  • spam sms - spam mobile numbers - Dear- Cus|tomer' your S!Bl Y,0N0 reward.p!oints worth Rs.4989 is g oing, to be e-xpired' T|oday. Click the link here to r!edeem now, https://ct-1ps.pag...
  • CONTACT US - M.SIVAKUMAR S/O.P.MURUGESAN 345, TEACHERS QUATERS MELUR - 625106 MADURAI DT TAMILNADU MOBILE: 7708661011, WHATSAPP: 7708661011, email: msksiva@g...
  • CONTACT US - Free NGO Ads & Online Promotion of All NGO Causes (Run by Sevajothi Trust) Thanks to all my wellwishers visit again. Please give us feedback, Suggestion...
  • Contact Us - madurai tamilnadu mobile: https://tv-actors.blogspot.com/
  • contact me - M.SIVAKUMAR S/O.P.MURUGESAN 345, TEACHERS QUATERS MELUR - 625106 MADURAI DT TAMILNADU MOBILE: 7708661011, WHATSAPP: 7708661011, email: msksiva@...
  • Exclusive market updates - Inbox Search for all messages with label Inbox Remove label Inbox from this conversation data collections Search for all messages with label data collect...
  • Wedding Seervarisai Thattu decoration models - [image: sevajothi-plate-decorators] [image: sevajothi-plate-decorators] [image: sevajothi-plate-decorators] [image: sevajothi-plate-decorators] [imag...
  • Crafts from self help groups - · * ANTIQUE* · *CLOTH COVER ART* · *COLLECTIONS* · *CRAFT* · *DRAWING ART* · *DVD* · ...
  • Links - https://pmsreal-estate.blogspot.com/ http://designersiva.blogspot.com/ http://kottapathar.blogspot.com/ http://mjmchairland.blogspot.com/ http://sevaj...
  • links ad content - www.standardtips.com = links URL = www.standardtips.com Title = All tips and tricks for your complete life. Description = Get the complete tips fo...
  • IFHRMS Wipro Error - அனைத்து அரசு அலுவலகங்களிலும் IFHRMS என்ற செயலியின் மூலம் பணம் சார்ந்த பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இம்மாதம் மார்ச் மாதத்தில் இருந்து IFHRMS செய...
  • IFHRMS Wipro Error - அனைத்து அரசு அலுவலகங்களிலும் IFHRMS என்ற செயலியின் மூலம் பணம் சார்ந்த பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இம்மாதம் மார்ச் மாதத்தில் இருந்து IFHRMS செய...
  • Joint Venture (JV) Deal - What is a Joint Venture (JV) Deal? Off late demand for joint ventures in real estate has been increasing exponentially. In real estate, JV means that a ...
  • we need lands - 1. அனைவருக்கும் வணக்கம், மதுரை குறைந்த நாட்களில் இரண்டு மடங்கு விலை ஏறக்கூடிய சைட் போட 1 முதல் 10 ஏக்கர் வரை வேண்டும். குறைந்த நாட்களில் இரண்...
  • Agamudayar links - http://advertisementsinallmedia.blogspot.com/2022/01/calender.html http://mukurtham.blogspot.com/2019/03/wanted-bride.html http://puyarparavai.blogspot....
  • links - *Education**:* http://bedtti.blogspot.com/ http://indiansportsgames.blogspot.in/ http://interfacetrivandrum.blogspot.in/ http://deoceo.blogspot.com/ ...
  • social links - https://in.pinterest.com/pin/778137641849577370/ https://www.facebook.com/VIKAS-Nighties-138887056756452 https://www.youtube.com/watch?v=AN20WOVCc04 ...
  • Marriage links - bride groom background verification online https://sevajothitechnologies.blogspot.com/ MJM Samiyana Chair Land Hiring Services - Decorators in Sivagang...
  • Social Links - http://madrastamilnadu.blogspot.com/2016/04/blogs.html http://kottapathar.blogspot.com/2012/06/blog-links.html http://vanistudio.blogspot.com/2017/12/p...
  • social links - https://study-india.org/213907-s_b_g_s_m_teacher_training_institute_melakodumalur_ramnad.htm http://beamconsultancyservices.blogspot.com/
  • Social Links - https://www.indiamart.com/sptravels-tours/ https://sp-travels-tours.business.site/
  • Social Links - https://msksiva.wordpress.com/ http://mechanical-electricalmachines.blogspot.com/2011/ http://free123waylinksdirectory.blogspot.com/2012/05/multiple-we...
  • social links - http://advertisementsinallmedia.blogspot.com/2020/02/notices.html http://myclientsmydesigns.blogspot.com/2013/09/arasappalams.html http://lordthirumal...
  • social links - http://subalakshmiinstitute.blogspot.com http://www.saivaneri.org/pillai-institutions.htm
  • social links - https://gtechindia.org/member/softland-india-ltd https://www.tradeindia.com/softland-india-ltd-29664352/ https://in.linkedin.com/company/softland-india...
  • social links - *SVP Textile College, Coimbatore* https://www.careers360.com/colleges/sardar-vallabhbhai-patel-international-school-of-textile-management-coimbatore htt...
  • Sister Concerns - http://vsquareservices.blogspot.com/ http://jeevatapes.blogspot.com http://vmagencies.blogspot.com http://bharathfoundation.blogspot.com http://beamcon...
  • Sister Concerns - http://vsquareservices.blogspot.com/ http://jeevatapes.blogspot.com http://vmagencies.blogspot.com http://bharathfoundation.blogspot.com http://beamco...
  • Contact VHM - Vivekananda Health Mission 136,B Kamarajar salai, Madurai-625009. Tamilnadu - Phone 8056917878 ,9344121976, 9842132288, 9842132283. - Email sol...
  • Open sources links - http://openbookproject.net//
  • ads links - https://tnpsc-ssc-rrb-tet-trb-bsrb.blogspot.com/ https://trivandrumtomorrow.blogspot.com/ https://womens-trust.blogspot.com/ https://madurai-kamaraj-univers...
  • ELDERS HOME - ELDERS HOME IN MADURAI! Old age home in mela anuppanadi(near Thepakulam) *Individual *and double sharing rooms A/C,non A/C rooms 24 hrs staff support,cot,f...
  • திருக்குறள்: - 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 2. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். -திருவள்ளுவர் குறள் விளக்கம்: பெரியாரைப் போற்...
  • blog links - *Education*: http://bedtti.blogspot.com/ http://staff-teachers-students.blogspot.in/ http://indiansportsgames.blogspot.in/ http://svpitmcbe.blogspot.com/ ht...
  • Photos gallery - http://firstnightdecoration.blogspot.in/2017/11/wedding-cars.html http://vikasnighties.blogspot.in/2011/02/photo-gallery.html http://bharathfoundation.blogs...
  • Tags - Tags, lorry, truck, booking, LBS, parcel service, transport, logistics, van, container,
  • adsense earning blogs - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http://kottapathar.bl...
  • web blogs - best blog links http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http:...
  • Hardware links - http://softlandindia.blogspot.in/ http://indianindustrycompanies.blogspot.in/2011/06/wireless-electronic-spot-billing-and.html http://designersiva.blogspot.i...
  • design blogs - https://graphicsbackgrounds.blogspot.in/ https://designersiva.blogspot.in/ http://myclientsmydesigns.blogspot.com/ http://beamconsultancy.blogspot.com/ http...
  • new blogs - http://staff-teachers-students.blogspot.in/ http://cinema-movies-actress.blogspot.in/ http://associationsdirectory.blogspot.in/ http://indiansportsgames.blo...
  • கீரைகளும்_அதன் முக்கிய_பயன்களும்: - 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீ...
  • Samiyana Pandhal - Contact For Chairs & Samiyana Pandhal Prop: S.Muthuraman *MJM Samiyana & Chair Land* 9-1, Madurai Main Road, 4th Street Sivagangai, Tamilnadu Cell: +91 90...
  • blog links - *Education*: http://bedtti.blogspot.com/ http://staff-teachers-students.blogspot.in/ http://indiansportsgames.blogspot.in/ http://svpitmcbe.blogspot.com/ h...
  • blogs - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http://kottapathar.blo...
  • blogs - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http://kottapathar.blo...
  • Blog links - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http://kottapathar.blo...
  • Keyword tags - institute, English, spoken english, training center, coaching class, madurai, tamilnadu, india, Spoken English Training Institute
  • FAQ - What is E.S.I Scheme? In addition to necessities of food, clothing, housing etc., man needs security in times of physical and economic distress conseq...
  • New products - Metal Polishing Soap [image: Metal%20Polishing%20Soap] *Singapoor Pink Metal Polishing Soap* can be used for final polishing in all Aluminium and Stainles...
  • Tags - Lorry, Transport, luckage, godown, savani, goods, logistics, madurai, mumbai, booking office, trucks, oldest transport, india
  • Construction links - IT Companies buildings Real estate refinancemortgageguide. http://indianindustrycompanies.blogspot.in/search/label/realestate
  • SEM portfolio stats - Jan 2014 - *Blog:* http://windrolinx.blogspot.in/ Total Page views= 7,508*, *Domain age= 4 years*, *Followers=3 *Social Profiles:* 1. https://plus.google.com/1168...
  • links - *Web* *domains* kitchenordertaking.com Fieldpaymentcollection.com handheldposmachine.com parkingticketmachine.com smartcardticketing.com gprsticketingmachi...
  • real estate links - http://designersiva.blogspot.in/search/label/cities http://sppromoters.blogspot.in/ http://metrocities.blogspot.in/ http://valghavalamudanrealestate.blogs...
  • links - Industries: www.mrgroupindia.com www.arasappalams.com www.vikasnighties.com www.tekinfosoft.com www.srienterprisesinc.com www.shathiguardings.com www.vasuin...
  • - I am boobalan from coimbatore working at bsnl
  • - we tie ups our hands to get success!