Skip to main content

தமிழர்கள் படுகொலை

ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறான் தமிழன் !!
ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசையும் இந்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது. மக்கள் மட்டும் கடுமையாக போராடிக் கொண்டிருக்க இந்திய அரசும் தமிழக அரசும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கின்றன. மனித உரிமை ஆணையமும், நீதிமன்றமும் தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை நம்பினோம் அடிமையானோம், திராவிடத்தை நம்பினோம் ஏமாளி ஆனோம் என்ற வாசகம் உண்மையில் மிகப் பொருத்தமாக உள்ளது. வேறு நாட்டில் மனிதர்கள் இறந்தால் இரங்கல் தெரிவிக்கும் இந்திய அரசு சொந்த நாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டால் சிறிய வருத்தம் கூட தெரிவிப்பதில்லை. இருபது தமிழர்கள் படுகொலைக்கு நடுவண் புலனாய்வு குழு விசாரிக்காது என்று திமிராக பதில் சொல்கிறார் பாஜக அமைச்சர். கேரளா கடல் எல்லையில் மீனவர்கள் கொல்லப்பட்டால் உடனே இத்தாலி கடல் மாலுமிகளை கைது செய்தது கேரளா அரசு. மீனவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடும் பெற்றுத் தந்தது. ஆனால் தமிழகத்தை ஆளும் திராவிட அரசுகள் யார் தமிழனைக் கொன்றாலும் இந்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறது. இப்படியான அவல நிலை எப்போது நீங்கப் போகிறது?
தமிழர்களுக்கான அரசும் தமிழகத்தில் இல்லை . தமிழர் பிரச்சனையை பாராளுமன்றத்தில் வலியுறுத்தும் பா.ம உறுப்பினர்களும் தமிழகத்திற்கு இல்லை. கர்நாடக முதல்வர் அவருடை மாநிலத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் , பா.ம உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மோடியை சந்தித்து தன்னுடைய மாநில சிக்கலுக்கு தீர்வு காண முயல்கிறார். கன்னட வழிக் கல்வியை கட்டாயப்படுத்த நடுவண் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். ஆனால் தமிழகத்திலோ, இருக்கும் தமிழ் வழிப் பள்ளிகளுக்கும் மூடுவிழா காண்கிறது அதிமுக அரசு. திமுக விற்கு மட்டும் பதில் சொல்லும் நிலையில் அதிமுகவும், அதிமுகவிற்கு மட்டும் பதில் சொல்லும் நிலையில் திமுகவும் இருந்து வருகிறது. இவ்விரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை அதிகாரமில்லாத மாநிலமாக மாற்றியது மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியத்தால் தேய்ந்து திராவிடத்தால் தமிழகம் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பது மட்டும் உண்மையாகவே உள்ளது. இந்தியாவில் தமிழகம் தன்னாட்சி பொருத்திய அதிகாரமிக்க மாநிலமாக மாற்றவும், உலகத் தமிழர்களை பாதுகாக்கும் ஒரு பலமான அரசாக தமிழகம் விளங்கிடவும் தமிழர்கள் இனியும் திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றக் கூடாது. தமிழக நலனில் முழு அக்கறையுள்ள தமிழர் கட்சிகளே தமிழகத்தை ஆளும் வகை செய்தல் வேண்டும். தமிழ்த் தேசிய கட்சிகளுக்கே நம் வாக்கு என்பதை தமிழக மக்கள் உறுதி செய்தல் வேண்டும். இந்திய தேசிய, திராவிட, பொதுவுடைமை கட்சிகளை தமிழ்ர்கள் நாம் புறக்கணிப்போம். தமிழர்களின் குரலாக தமிழர்களை ஒன்றிணைக்கும், தமிழையும் தமிழர்களையும் பாதுகாக்கும் தமிழ்த் தேசிய அரசை, அரசியலை தமிழகத்தில் உருவாக்குவோம்.

Popular posts from this blog

losses of tamil

வட இந்தியாவிலிருந்து கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டோம்
கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டோம்.. பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம், தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம். தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக்
கொண்டோம் சிங்கள தெலுங்கர்கள் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டோம் தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள்.
பொறுத்துக்
கொண்டோம் ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள்.
பொறுத்துக்
கொண்டோம் தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு
பொறுத்துக்
கொண்டோம் நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சி.
பொறுத்துக்
கொண்டோம் ஆத்து தண்ணீரை பன்னாட்டு கார்ப்ரே நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு.. தண்ணிரை வற்ற செய்து ஆத்து மணலை கொள்ளை அட…

social events 2012

water and jallikattu

காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிற தமிழகம்
ஏன் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தமாட்டோம் தடையை மீறுவோம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை உணர்ச்சிவயப்பட்ட அரசியலாக தான் தெரிகிறது. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தை தங்களுடைய பிரிவினை அரசியலுக்காக தமிழ்தேசிய வாதிகள் பயன்படுத்திக்கொள்வது கூர்ந்து கவனிக்கப்படவேண்டியுள்ளது. ஆம்! தோழரே! ஜல்லிகட்டு தமிழர்களின் உணர்வு.சர்வதேச சதியால் மரபுகாளைகளை அழிக்க துடிக்கும் பீட்டாவுக்கு துணை போகும் உத்தரவுகளுக்கு பணிய மறுப்பது எப்படி பிரிவினை அரசியல் ஆகும்?. Don't Compare BOTH:........ஜல்லிக்கட்டு விவகாரமே விவசாயிகள் மரணத்தை மூடி மறைக்க அரசு செய்யும் தந்திரம்காவிரி தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அமுல்படுத்தியதா?

வீடியோ கேம் விளையாட சொல்லும் அளவுக்கு தமிழகம் குனிந்து கொண்டிருக்கிறது.ஏறு தழுவல் உரிமை போராட்டத்தில் எங்கே பிரிவினை வந்தது. காவிரிப்பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நீங்கள் ஒன்றாகத்தான் பார்கி…